கலைப்புலி எஸ்..தாணு தயாரிப்பில்,,மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ்நடிப்பில் வெளியான “கர்ணன்” திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 9ஆம்தேதி திரையிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் ‘ஓடிடி’ தளத்திலும் ‘கர்ணன் ’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது ..
இதையடுத்து ‘ஜெர்மனி’ நாட்டில் உள்ள ‘பிராங்க் பர்ட்’ நகரில் வருகிற அக்டோபர் மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் நியூ ஜெனரேஷன்ஸ் இன்டிபென்டன்ட் இந்தியன் திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது












