கலைப்புலி எஸ்.தயாரிப்பில் தரமான ,மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் கர்ணன் .தனுஷ் நடித்திருக்கிறார். இயக்கம் மாரி செல்வராஜ். நாட்டுக்கு அவசியமான கருத்தை வலியுறுத்திய படம்..
இந்தப்படம் உலகளாவிய வெற்றியையும் ஈட்டியது என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
தற்போது அமெரிக்காவின் மிகச்சிறந்த பத்திரிகையான ‘நியூ யார்க் டைம்ஸ் ‘ சிறந்த திரைப்படப் பட்டியலில் ஐந்து படங்களைத் தேர்வு செய்திருக்கிறது.
அந்த 5 படங்களில் நமது ‘கர்ணனும்’ ஒன்று.!












