நடிகை சமந்தா,நாகசைதன்யா இருவருக்கும் இடையே நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.என நடிகை சமந்தாவின் மாமனாரும் ,நாகசைதன்யாவின் தந்தையுமான நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளனர்.
இது குறித்துநாகார்ஜுனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,கூறியுள்ளதாவது, “சமந்தாவுக்கும், சைதன்யாவுக்கு இடையே நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நான் இதை மிகுந்த பாரமான மனத்துடன் தெரிவிக்கிறேன்.
ஒரு கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் முற்றிலும் தனிப்பட்டவை.சமந்தாவும், சைதன்யாவும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். சமந்தா இந்த வீட்டில் இருந்த நாட்களை, அவர் எங்களுடன் செலவழித்த நேரங்களை நாங்கள் எப்போதும் அன்புடன் நினைவுகூர்வோம்.
சமந்தா எப்போதும் எங்களுக்கு நெருக்கமானவராகத் தான் இருப்பார். இருவருக்கும் இறைவன் மன வலிமையைத் தரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.












