யாரந்த சகுனி?
நாக சைதன்யா -சமந்தா இல்வாழ்க்கையில் சூட்டுக்கோலை சொருகிய அந்த சண்டாளன் யார்?
அடடே ..இந்த விவாகரத்து முடிவினை இன்டர்நேஷனல் அளவுக்கு இழுத்து விடுவார்கள் போலிருக்கிறதே!
கான்டர்வர்சிகளின் ஊற்றான கங்கனா ரணாவத் அந்த’சூட்டுக்கோல் சண்டாளன்’ இருக்குமிடம் பாலிவுட் என்பதாக அடையாளம் காட்டியிருக்கிறார்.
நடிகையாக மட்டுமின்றி துப்பறியும் புலியுமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் கங்கனா .
இந்த தலைவி நடிகை பாலிவுட்டின் தலைவலி என்பதாக சிலர் சொல்வார்கள். தற்போது அந்த தலைவியின் கழுகுப்பார்வை தெற்கு வரை பாயத்தொடங்கியிருக்கிறது.இந்த புண்ணியவாட்டியின் திருவருளால் சமந்தா -சைதன்யா மேட்டர் இந்திய அளவுக்கு தெரிந்து விட்டது!!
சமந்தா பாலிவுட் பக்கமாக போய்க்கொண்டிருக்கிறார் என்பதின் எதிரொலிதான் கங்கனாவின் குற்றச்சாட்டு !
பாலிவுட் பிரவேசத்தை நாசமாக்குவதற்காக நாகசைதன்யா பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் உதவியுடன் செயல்படுவதாக மறைமுகமாக சொல்கிறார் என்று கருத வேண்டியதிருக்கிறது.
“பத்தாண்டுகளுக்கு மேலாக காதலித்த பிறகு கல்யாணம் செய்து கொண்ட அந்த சவுத் ஸ்டார் நான்காண்டு வாழ்ந்து விட்டு திடீரென டைவர்ஸ் பண்ணிவிட்டார்.இதற்கு காரணம் அந்த பாலிவுட் சூப்பர்ஸ்டார்தான்! அந்த ஆளு பாலிவுட் டைவர்ஸ் எக்ஸ்பர்ட் !
பல பெண்களை சீரழித்தவர் அந்த சூப்பர் ஸ்டார்.”என்கிறவர் மேலும் சொல்வதைக் கேளுங்கள்.
“டைவர்ஸ் எக்ஸ்பர்ட் என்பதால் டைவர்ஸ் சுலபத்தில் முடிந்திருக்கிறது.இதை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது ” என்று எச்சரிக்கிறார் கங்கனா .அவரின் பெயரை சொல்லாமல் போனாலும் பத்திரிகையாளர்கள் கணிப்பது ஆமிர்கானைதான் !கங்கனா அடிக்கடி சண்டை போட்டது இவருடன்தான்!
யாரந்த சூப்பர்ஸ்டார் தலைவி?