வதந்தியானாலும் வாய்க்கரிசி போடாமல் அது வருவதில்லை என்கிறார்கள் ,உண்மை தெரிந்தவர்கள்.!
நாக சைதன்யா ,விஜய் ஆகியோரின் கோடிகள் பற்றி ஊடகங்களில் பல தகவல்கள்..!
சமந்தாவின் டைவர்ஸுக்கு 200 கோடி ,விஜய்யின் தெலுங்குப்பட சம்பளம் 120 கோடி…இப்படியாக பரபரப்பு தகவல்கள் .!
200 கோடி ரூபாயை நாக சைதன்யா குடும்பம் கொடுக்க வந்ததை சமந்தா வாங்க மறுத்துட்டாங்கன்னு பெருந்தன்மையான ஒரு தகவல். பூனை கருவாட்டை மறந்த கதை மாதிரி தெரியல.?
அன்னபூர்ணா ஸ்டுடியோவை சீல் வைத்த கதை தெரியாம இப்படி தகவல்.!
விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு படத்தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பது முன்னரே வெளியான செய்தி. இந்த படத்துக்கு விஜய் 120 கோடி வாங்கி இருக்கிறார் என்பதாக தமுக்கு அடித்தது இணையம்.
ஆனால் இவ்விரண்டு தகவல்களும் ஒரே இடத்தில் ஜனித்து வெளியானது என்று சொல்லப் படுகிறது.
இந்த தகவலால் தமிழ்ப்படத்தயாரிப்பாளர்கள் சிலர் “என்ன இப்படி பண்றார் விஜய். இவருக்காக நாம்ப வெயிட் பண்ணிட்டிருக்க ஆந்திராவுக்கு கை கொடுக்கிறாரே “என வருத்தமுற்றிருக்கிறார்கள்.
இணையதளங்களில் இவ்வாறான பொய்ச்செய்திகளைப் பரப்புவதற்கென்றே ஒருவர் வேலை செய்துகொண்டிருப்பதாகவும் அவரிடம் பணம் கொடுத்துத்தான் விஜய் மற்றும் சமந்தா ஆகியோர் இம்மாதிரியான பொய்ச்செய்திகளைப் பரப்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
வெள்ளம் வருதுன்னு சொல்ல கூலி கொடுத்து தமுக்கு அடிக்கிற கதையா இருக்கே!