இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், விக்ரம்,சதா,-பிரகாஷ் ராஜ், விவேக் ஆகியோரது நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அந்நியன் ’ சமீபத்தில் இப் படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும்,விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது .
இந்நிலையில் ‘அந்நியன் ’ படத்தின் ரீமேக் உரிமை தன்னிடம் இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்..இதற்கு பதிலடியாக இயக்குநர் ஷங்கர் தரப்பிலும் அறிக்கை வெளியானது .
இவ்விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர் இருவருக்கும் இடையே மோதல் உருவானது.இருவருமே கதை உரிமை தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக இருவருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ‘அந்நியன் ’ ரீமேக்கை இந்தியில் உருவாக்க இருப்பதாகவும் அதில் முக்கிய கேரக்டரில் ஜாக்கிசானை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது












