கோவிட் 19 அச்சுறுத்தல் புதிதாகத் தொடர்கிறது.!!
சனியன் விலகியது என நினைத்தால் அகோரமாக உருவெடுத்து நடுங்க வைக்கிறது.
இறைவா! இன்னும் என்ன செய்ய நினைத்திருக்கிறாய் எங்களை!
சில ஐரோப்பிய நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.புதிதாக தென்னாப்பிரிக்க நாடுகளில் பரவிக்கொண்டிருக்கிற கொரானா வைரஸ் உலகை மிரட்டத்தொடங்கி இருக்கிறது. ஒமிக்கிரான் என்பது புதியது.!!!
இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படுகிற பேரபாயம் எதிர்நோக்கப்படுகிறது.
ஐசியுக்களில் மக்கள் கூட்டம் திரண்டிருக்கிறது .தென்னிந்திய திரைப்பட டான்ஸ் மாஸ்டர் சிவ ஷங்கர் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.75 சத விகித நுரையீரல் தொற்று.இவரது குடும்பமே ஐசியூவில்தான் இருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது வேகமுடன் தேறி வருகிறார்
மும்பையில் வேகமுடன் பரவி வருகிற இந்த கொள்ளை நோய் 2021 டிசம்பரில் தாண்டவமாடிவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.பள்ளிக்கூட மாணவ மாணவியர் இலக்ககாக அமையலாம்.
அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.