
ரசிகர்கள் விரும்பும் சிறப்பான கதைகள், வித்தியாசமான உள்ளடக்கம் நிறைந்த கதைகள், OTT தளமான டிஸ்னியில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது,
இயக்குநர் திரு இயக்கத்தில் அஞ்சலி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள “ஜான்சி” திரைப்படத்தை அடுத்ததாக ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.
நடிகர் கிருஷ்ணா இந்த இணைய தொடரை தயாரித்துள்ளார். இணைய தொடரில், நடிகை அஞ்சலி, முழு நீள அதிரடி வேடத்தில் தோன்றுவது இதுவே முதல் முறை. இந்த இணைய தொடர் ஒரு முழு நீள ஆக்சன் டிரமாவாக உருவாகியுள்ளது.
இத்தொடரில் அஞ்சலி , முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா சம்யுக்தா ஹோமத் ஆகியோருடன் மற்றும் பல முன்ணனி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், சண்டைக்காட்சிகளை யானிக் பென் அமைத்துள்ளார், அவர் தி ஃபேமிலி மேன் தொடரின் மூலம் உலகளவில் ரசிகர்களை, தனது அதிரடி சண்டை காட்சி அமைப்பின் மூலம் மிரள வைத்தவர் என்பது குறிப்பிடதக்கது.












