கால வரையின்றி ஆர் ஆர் ஆர் வெளியீடு தள்ளிப்போடப்படுகிறது.
காரணம் கொரானா என்கிற கொடுந்தொற்று கனவேகமுடன் பரவுவதால்.!
இதன் காரணமாக தியேட்டர்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை பாதிக்குப் பாதி குறைக்கப்படுவதால் வருமானமும் பாதிக்கப்படுகிறது.
இதனால் இயக்குநர் ராஜமவுலி மும்பைக்கு பறந்து சென்று படம் தொடர்புடைய பிரமுகர்களுடன் பேச்சு நடத்தினார். அதன் முடிவினை டி வி வி என்டெர்டெய்ன்மெண்ட் தனது டிவிட்டர் கணக்கில் முக்கிய அறிவிப்பை தெரிவித்திருக்கிறது.
“அனைவரது நலனையும் முன்னிட்டு எங்களின் படமான ஆர் ஆர் ஆர் பட வெளியீட்டை தள்ளி வைக்கிறோம் “
ஆந்திராவில் உள்ள நிலைமை தமிழ்நாட்டுக்குப் பொருந்துமா?
வலிமை பட வெளியீடு தள்ளிப்போகுமா? மக்கள் நலனா ? தயாரிப்பாளர் நலனா ? வெளியீட்டாளர் நலனா ?