
பாகுபலி, சாஹோ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார். ஜோடியாக பூஜா ஹெக்டே. காதலும் காமமும் நிறைந்த கேரக்டர்களில் பின்னிப் பெடல் எடுக்கக்கூடிய கவர்ச்சிப் பேரரசி .
ராதா கிருஷ்ண குமார் இயக்கிய இத்திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத்தயாரித்துள்ளனர்.
சனவரி 14,2022 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட பன்மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சனவரி 7 ஆம் தேதியன்று வெளியாகவிருந்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகாத நிலையில் ஏராளமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
தமிழிலும் இந்தப்படம் பெரிய அளவில் திரையிடப்படுகிறது.
தமிழில் இந்தப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அந்நிறுவனம் இப்படத்தை வெளியிடவிருப்பதால் அதிகத் திரையரங்குகள் இந்தப்படத்துக்குக் கிடைக்கலாம்
அஜீத்தின் வலிமை படத்துக்குப் போட்டியாக இப்படம் உருவெடுக்கும் என்பதால் விஜய் ரசிகர்கள் இப்படம் பற்றிய செய்திகளை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
எப்படியெல்லாம் ரசிகர்கள் வெறுப்புகளை வெளிக்காட்டுகிறார்கள் பாருங்கள்.












