இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதில் கோலிவுட், பாலிவுட் என பாரபட்சமின்றி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இந்நிலையில், .மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் இரு மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராமில்கூறியுள்ளதாவது,
மருத்துவ ஆலோசனையின் பேரில் வீட்டு தனிமை நாட்களை முடித்து விட்டோம். தற்போது சோதனையில் நெகடிவ் என வந்து விட்டது. முதல் இரண்டு நாட்கள் மிக கடுமையாக இருந்தது எங்களுக்கு. அடுத்தடுத்த நாட்கள் சற்று பரவாயில்லை. இந்த வைரசிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள ஒரே வழி மாஸ்க் அணிவது, தடுப்பூசி போட்டுக் கொள்வது தான். அனைவரும் கவனமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்
.கடந்த சில நாட்களுக்கு முன் வாயில் தெர்மாமீட்டருடன் இருப்பது, சோர்வான முகத்துடன் படுத்திருப்பது போன்று தங்கையுடன் இருக்கும்புகைப்படங்களை ஜான்வி கபூர்.தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.