சிம்புவின் மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் 10 வது படம் பற்றிய அறிவிப்பு தற்போது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
இப் படத்திற்கு தற்போது மன்மத லீலை என பெயரிடப்பட்டுள்ளது. அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் முழு நீள காமெடி படமாக உருவாக்கப்பட உள்ளதாம். இப் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில்,. அசோக் செல்வன் வித்தியாசமான இரண்டுவித தோற்றங்களில் காட்சியளிக்கிறார்.\
இந்த படத்தில் அசோக் செல்வன் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா அல்லது இரண்டு வித கெட்டப்பா என்பது இயக்குனர் வாய் திறந்தால் தான் தெரியும்..இந்த படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கமல்ஹாசன், ஆலம்ஆகியோரது நடிப்பில், கே. பாலச்சந்தர் இயக்கத்தில்1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்,மன்மத லீலை படத்தின் தலைப்பே தற்போது வெங்கட்பிரபுவின் படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.