
அமெரிக்காவில் மடி நிறைய டாலர்களை சம்பாதித்த இளைஞர் வெங்கட் ரெட்டி .
படம் எடுக்க வேண்டும் என்பது இவரது தணியாத ஆசை.அந்த படத்தில் நாயகனாக இருக்க வேண்டும் என்பது அந்த ஆசையின் அடித்தளம்.
சென்னை வந்தார் .படமும் எடுத்து முடித்து விட்டார் .நாயகியாக உபாசனா.இன்று படத்தின் பாடல் காட்சியும் முன்னோட்டமும் இன்று பிரசாத் லேப்பில் வெளியிடப்பட்டது .
படத்தின் இயக்குநர் சந்தீப் சாய்.படத்தின் பெயர் யாரோ !ஹாரர் ,ஆவி ,திரில்லர் மூவி!
இருவரும் புதியவர்கள். ஆசைக்காக ஐடி துறையிலிருந்து வந்து
விட்டவர்கள்.சாதிப்போம் என்கிற நம்பிக்கை.
கோடம்பாக்கம் இவர்களுக்கு சொல்லப்போகும் பாடம் என்னவென தெரியாமல் கால் வைத்து விட்டார்கள்.
சினிமாவுக்கு ஈசிஆர் சாலையில் வாடகைக்கு வீடுகளை விடுகிற அம்மணியின் டார்ச்சர் இவர்களுக்கு முதல் பாடமாக அமைந்தது.
ஏமாற்றத்தை தாங்கி கொண்டு மற்றொரு வீட்டை அமர்த்திக்கொண்டு படத்தை முடித்து விட்டார்கள் .
அடுத்து புரொடக்சன் கம்பெனிகளுக்கு படை எடுத்தல்.புது முகங்கள் ,அறிமுக இயக்குநர்கள் என்றாலே அந்த கம்பெனிகளுக்கு அலர்ஜி என்பது அலைச்சலுக்குப்-பின்னர்தான் தெரிந்தது.
முடிவில் இத்தகையவர்களின் படைப்பின் தரம் அறிந்து உதவுகிற டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் . .ரவீந்திரன்தான் கை கொடுத்திருக்கிறார்..இவரது புண்ணியத்தில் படம் தியேட்டருக்கு வருகிறது.
முடிவு மக்களின் கையில்!
ஆவி அடிக்குமா .பணம் தருமா?












