
விஜய்- சிலம்பரசன் ஆகியோரின் படங்கள் மீண்டும் ஒரு மோதலுக்குத் தயாராகிறது.
கவுதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ என்கிற படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்த படத்தின் வெளியீடு வருகிற ஏப்ரல் என்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படமும் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து .சிம்பு , விஜய் மோதல் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.












