
தெலுங்கில் ‘சார்’ தமிழில் ‘வாத்தி’ என பெயரிடப்பட்ட இருமொழிப்படம் தற்போது சிக்கலில் இருக்கிறது.
இந்தப்படம் தனுஷின் ஆந்திர பிரதேச என்ட்ரிக்கு உதவக்கூடும் என்று நினைத்தார்கள். பிள்ளை பிறந்த நேரமோ ,பெயர் வைத்த நேரமோ என்று சிலர் பிள்ளையின் குணம் பற்றி குறைப்பட்டுக்கொள்வார்கள். அதைப்போல இந்த ‘சாரின்’ நிலையும் ஆகிவிட்டது.
தெலுங்கு தேசத்தில் வைத்துதான் படத்தின் நாயகன் தனுஷ் ,மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் பிரிந்து விட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது.
அடுத்து படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும் தயாரிப்பாளர் டி .வி.வி. தன்னையாவுக்கும் முட்டல் ,மோதல்.! கிரியேட்டிவ் டிஃபரென்ஸ் என்கிற பெயர் அதற்கு.!
முதல் செட்யூல் எந்த கோளாறும் இல்லாமல் முடிந்து இரண்டாவது செட்யூல் போகிறபோதுதான் படத்தின் நாயகி சம்யுக்தா மேனனின் நடிப்பு சரியில்லை என்பதாக புகைந்தது.
இந்த நேரத்தில் தான் கேமரா மேன் தினேஷ் கிருஷ்ணனும் ‘கிரியேட்டிவ் டிபெரென்ஸ் ‘என்று சொல்லி வெளியேறிவிட்டார். இயக்குநர் வெங்கி கோவிட் பாதிக்கப்பட்ட இடங்களில் ஷூட் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்.
இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் தன்னையாவுக்கு இந்தப்படம் வெற்றிபெறுமா என்கிற சந்தேகம் வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
ஏன் இப்படி ஒரு சந்தேகம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ‘வாத்தி’ படத்துக்கு ஆதரவு தருவார்களா என்கிற கேள்விதான் அதற்கு காரணம் என்கிறார்கள்.
தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்குப்பிறகு ரஜினிகாந்த் எதுவும் சொல்லாத நிலையில் அவரது ரசிகர்கள் எப்படி தனுஷுக்கு ஆதரவாக இருப்பார்கள்?ஆனால் அப்படி எதுவும் நேர்ந்து விடாது என்பதை தனுஷின் வெற்றிதான் உறுதி செய்யும்.இதற்காகவேனும் அவர் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து விடுவார் என்கிற பேச்சும் வந்திருக்கிறது. நல்லது நடந்தால் வளர்ச்சிதான் ,நல்ல வாழ்வுதான்!
ஓடிடியில் தனுஷின் மார்க்கெட் சரிந்து விட்டதாக ஒரு பேச்சு இருக்கிறது.மேலும் தெலுங்கில் தனுஷுக்கு மார்க்கெட் எதுவும் இல்லை.தமிழ் வாத்தியை வைத்துதான் சம்பாதிக்க முடியும் என்று நினைத்திருந்தார்கள்.
தனுஷ் -ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு மேட்டரும் தயாரிப்பாளரை படத்தின் பட்ஜெட்டில் கை வைக்க வைத்து விடும் என்கிறார்கள்.












