‘பாகுபலி’ ஸ்டார் பிரபாஸ் இப்போது அகில இந்திய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அவரது அடுத்த படம் ‘சலார் ‘.பான் இந்தியா படம்.
இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் .அண்மையில் இவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியபோது இவருக்கு பெருமை சேர்க்கிற வகையில் ‘சலார் ‘போஸ்டரை நடிகர் பிரபாஸ் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்தில் ஸ்ருதிக்கு என்ன கேரக்டர். நீண்ட முழுக்கை சர்ட் அணிந்து ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்று அந்த போஸ்டரில் தோன்றுகிறார். அப்படி என்ன சிந்தனை?ஆத்யா என்கிற பெயர் திரை உலகில் பிரசித்தி பெற்றது.கன்னடப்படத்தில் இடம் பெற்றிருந்த முக்கியமான கேரக்டர்.
ஸ்ருதி பொலிடிகல் ரிப்போர்ட்டராக படத்தில் வருகிறார் என்கிறார்கள்.இது ஒரு கேங்ஸ்டர் படம்.ஐந்து மொழிகளில் வெளியாகிறது.கேஜிஎப் படத்தின் மொத்த யூனிட்டும் இந்த படத்துக்காக ஒர்க் பண்ணுகிறது. பெரிய அளவில் இந்த படம் தயாராகிறது.