
“பாலிவுட் டைரக்டர்களுக்கு பணக்காரர்களை பற்றித்தான் படம் எடுக்கத்தெரியும். சாதாரண மக்களை படம் பிடிக்கத்தெரியாது.அதனால்தான் பெரும்பாலும் தோல்வி அடைகிறார்கள் கதையைத்தேடி தெற்கு பக்கமாக வருகிறார்கள் .”என்று அண்மையில் ஆந்திர தேச இயக்குநர் ஒருவர் கூறி இருந்தார்.
அது உண்மைதான் என்பதை ஒரு புள்ளி விவரம் சொல்லுகிறது.
தென்னகத்தை சேர்ந்த திரைப்படங்களை டப் செய்கிறார்கள் ,அல்லது ரி மேக் செய்கிறார்கள்.இது தற்போது பாலிவுட்டில் பழக்கமாகி இருக்கிறது. 25 படங்களை அப்படி கையாண்டிருக்கிறார்கள்.
தமிழில் வெளியான கைதி ,ஜிகர்தண்டா,விக்ரம் வேதா ,துருவங்கள் பதினாறு ,ராட்சசன் ,தடம் ,கோமாளி ,மாநகரம், அருவி ,மாநாடு ,சூரரைப் போற்று ,மாஸ்டர் ஆகிய படங்கள் பாலிவுட்டில் ரிமேக் அல்லது மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
ஆந்திராவிலிருந்து சத்ரபதி ,நந்தி ஜெர்சி ,ஆலா வைகுந்தபுரமுல்லு ஆகிய படங்கள் பாலிவுட் சென்றுள்ளன.மலையாளத்திலிருந்து டிரைவிங் லைசன்ஸ்,திரிஷ்யம் 2,ஹெலன் ,ஐயப்பனும் கோஷியும் ,நாயட்டு ஆகிய படங்களை கையாண்டுள்ளனர்.
இவை தவிர மேலும் பல படங்கள் வணிக ரீதியாக பேசப்பட்டு வருகின்றன.
ஆக இந்திய சினிமாவில் தெற்குதான் வடக்கை ஆண்டு கொண்டிருக்கிறது.












