
“சென்னை அண்ணா சாலையில் அஜித்குமார் சுலபமாக நடந்து செல்ல முடியுமா ,அதுவும் பகல் நேரத்தில்?”
“முடியும் சார்.! அவர் நடக்கப்போகிறார் பாருங்கள்.!”
“என்னிக்கி ப்ரோ?”
“மார்ச் 9 ம் தேதி!”
“பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தானே?”
“அதெல்லாமில்ல. சென்னை அண்ணா சாலையை அப்படியே பெயர்த்து எடுத்து ஹைதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரத்தில் கொண்டுபோய் வச்சிருக்காங்க சார்! அதைப்பார்த்தபோது ஆச்சரியமா இருந்துச்சு.!பெரிய செட் .அஜித்தின் அடுத்த படத்துக்கான செட் “என்று அண்ணா சாலையில் அஜித் என்கிற தலைப்புக்கு பொருள் சொன்னார்.
“வலிமையைப் பற்றிய செய்தி ஏதும் இருக்கா?”
“இந்தி வலிமையை பிப்.25 -ல் வட இந்தியாவில் 1000 ஸ்கிரீன்ல ரிலீஸ் பண்ணப்போகிறார் போனிகபூர்.! ஆனால் இதே நாளில்தான் அலியா பட்டின் கங்குபாய் படமும் ரிலீஸ் ஆகுது. ஸ்க்ரீன் உங்களுக்கு எப்படி கிடைக்கும்னு கேட்டா “அது வேற மாதிரியான ஜானர் .வலிமை வேற மாதிரியான கதை”ன்னு போனிகபூர் சொன்னார்.
“நம்பிக்கையை பாராட்டணும்ப்பா !”












