சீனாவில் பிரமாண்டமாக வெளியாகப்போகும் “கனா” திரைப்படம் !
சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பாக உருவான படம் “கனா”. இப்படம் தற்போது சீனாவில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில், சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகப் போகிறது.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் முதன்மை பாத்திரங்களிலும் சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும் நடித்திருந்த படம்தான் “கனா”
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒருமித்த பாரட்டுக்களை பெற்று, பிரமாண்ட வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக சாதனை படைத்த இப்படம் மொழிகள் தாண்டியும் பாராட்டு பெற்றது.
சீனாவில் வரும் மார்ச் 18 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ் மொழியில் சீன மொழி சப் டைட்டிலுடனும், நேரடி சீன மொழி யிலும் இப்படத்தை வெளியிடுகின்றனர்.