கிட்டத்தட்ட 6 மாசம் ஆச்சு ,நாகசைதன்யாவும் சமந்தாவும் பிரிஞ்சு.!
அவங்க அவங்க வாழ்க்கை என்று தனி வழிப்பயணம் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே கையில் நிறைய படங்கள்.
இதில் கவர்ச்சி காட்டி நடிப்பதில் ஐட்டம் டான்சர்களை விட முன்னணியில் இருக்கிறார் சமந்தா .! அதிலும் புஸ்பா படத்தில் போட்டிருக்கும் ஆட்டம் பல தயாரிப்பாளர்களை உசுப்பி விட்டிருக்கிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்.
தற்போது டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிற சேதி, நாக சைதன்யாவுக்கு சொந்தமான பொருட்களை சமந்தா தன்னுடைய முன்னாள் கணவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டாராம். அதில் கல்யாணப்புடவையும் ஒன்று என்கிறார்கள்.அந்த புடவை சைதன்யாவின் பாட்டிக்கு சொந்தமானது.
.












