
தனது காதல் வாழ்க்கையை மறைத்தவர் இல்லை லேடி சூப்பர் ஸ்டார். நயன்தாரா!
சிம்புவுடன் சில காலம் ,பிரபுதேவாவுடன் பல ஆண்டுகள் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் என வாழ்க்கை கடந்து கொண்டு இருக்கிறது.
விக்கியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார் உச்ச நடிகை நயன்தாரா .
கடந்த ஆண்டுதான் இருவர்க்கும் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது.
37 வயதினை கடக்கும் நயன் வாடகைத்தாய் வழியாக குழந்தை பெற்றுக் கொள்ளப்போவதாக சில ஊடகங்கள் தகவல் தந்திருக்கின்றன.
வலியின்றி பெற்றுக்கொள்கிற இந்த வாடகைத்தாய் வழியாக வட இந்திய நடிகைகள் பிரியங்கா சோப்ரா ,பிரீத்தி ஜிந்தா ,ஷில்பா ஷெட்டி முன்னரே அம்மாக்களாக மாறி இருக்கிறார்கள் .
இந்த செய்தியை நயன் ,விக்கி இருவரும் ஆம் என சொல்லவில்லை.இல்லையென மறுக்கவும் இல்லை.!
வாழ்க வளமுடன்.!












