Tuesday, September 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“நடிகர் சங்க கட்டிடத்துக்கு நிதி வழங்குக !” பூச்சி முருகன் கோரிக்கை.

admin by admin
March 22, 2022
in News
419 5
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ராக் போர்ட் என்டர்டெயிண்ட்மென்ட் சார்பில்டி..முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு  கமர்ஷியல் படம்தான்  “மன்மதலீலை”. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

You might also like

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

 கிரியேடிவ் புரொட்யுசர்கே.பி..ஶ்ரீராம் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வினில் தயாரிப்பு நிறுவனம் சார்பாக நடிகர் சங்க துணைத் தலைவர் திரு பூச்சி முருகனிடம், நடிகர் சங்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலை அளிக்கப்பட்டது. 

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா பேசியதாவது…

“நிச்சயமாக இது ஆபாசமான படமல்ல. இயக்குநர் பாலசந்தர் இருந்து அவர் எடுத்திருந்தால் பாலச்சந்தரின் மன்மதலீலை என்று சொல்லக்கூடிய தகுதி கொண்ட படம். பார்க்க தகுதியுள்ள படம். மாநாடு படத்தை விட அதிகமான டிவிஸ்ட்டுடன் இந்தப் படம் உங்களை ஆச்சரியப்படுத்தும், வெங்கட் பிரபு மிக அட்டகாசமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த காலத்தின் ஜெமினி கணேசன் அசோக் செல்வன் தான். “என்று பாராட்டினார்.

நடிகை ரியா சுமன் பேசியதாவது…

என்னுடைய முந்தைய படங்களை விட இப்படம் மிக வித்தியாசமான படம், வெங்கட் பிரபு படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவர் எனக்கு லீலா பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அசோக் செல்வனுடன் வேலை பார்த்தது மிக ஜாலியாக சந்தோஷமாக இருந்தது.  இந்தப் படத்தை நீங்கள் சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம்.  எல்லோருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் தமிழ் .எ  அழகன் பேசியதாவது…

இப்பட வாய்ப்பு தந்ததற்கு வெங்கட் பிரபு சாருக்கு நன்றி. அசோக் என் காலேஜ் சீனியர் அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். நான் வேலை பார்த்த தெலுங்கு படத்திலும் சம்யுக்தா ஹெக்டே தான் நாயகி. இதிலும் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது எல்லோருக்கும் நன்றி.

நாயகி சம்யுக்தா ஹெக்டே பேசியதாவது..

எல்லோருக்கும் மிக்க நன்றி. இந்த படத்தில் வேலை செய்தது மிக மிக சந்தோஷமாக இருந்தது. ஏப்ரல் 1 தியேட்டரில் வருகிறது எல்லோரும் வந்து பாருங்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நாயகன் அசோக் செல்வன் பேசியதாவது…

காலேஜ் முடிந்த காலத்தில் நண்பர்களுடன் சென்னை 28 பார்த்தோம்,  இப்போது வெங்கட் பிரபு அண்ணாவுடன் வேலை பார்த்தது வரம், கொரோனா டைம்ல பரிசோதனை முயற்சியாக இதை பண்ணலாம் என்றார். நடுவில் எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது, அந்த நேரத்தில் எடுத்தது தான் இந்த முத்த காட்சிகள் எல்லாம்.

ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பலர் இந்தப் படம் ஏன் செய்தீர்கள் என கேட்டார்கள், இந்த படத்தில் எந்த கெட்ட விசயமும் இல்லை என எனக்கு தெரிந்தது. என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் மிக மிக நல்ல படம். எனக்கு வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் பேசியதாவது…

கேமராமேன் தமிழ். ஏ . அழகன் என் உதவியாளர் தான். மிக நல்ல பையன். அவரது லீலைகளையே ஒரு படமாக எடுக்கலாம். வெங்கட் பிரபு ஒளிப்பதிவாளரை ஈஸியாக வைத்து கொள்வார். இசை நன்றாக இருக்கிறது. படமும் அழகாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது….

திரைக்கதையில் அசத்தகூடியவர்களில் சமீப காலத்தில் வெங்கட் பிரபுவை மிஞ்சும் வேறொருவர் இல்லை. மாநாடு படத்தில் அந்தளவு அசத்தியிருப்பார் அதே போல் இந்தப்படத்திலும் மிக வித்தியாசமாக அசத்தியுள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அனைவரும் திரைக்கதைக்காக வெங்கட் பிரபுவை பாராட்டுவார்கள். எல்லோருக்கும் லாபம் தந்த படம் மாநாடு, அதே போல் இந்த படமும் வெற்றி பெறும் நன்றி.

இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசியாதாவது…

அண்ணன் படத்திற்கு நான் இசையமைத்து படம் ரிலீஸாவது மகிழ்ச்சி. கல்யாணமான அனைவரும் பார்க்க வேண்டிய படம், 2010 லும் 2020 லும் நடக்க கூடிய கதை. படத்தில் பெண்களை உஷார் செய்வது எப்படி என அசோக் சொல்லி தருவார்.  எல்லோரும் பார்க்கக்கூடிய படம். எங்க அண்ணனுக்கு பயங்கரமான மூளை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த படத்தில் நிறைய க்ளாப்ஸ் கிடைக்கும். படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் நன்றி.

நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் பேசியதாவது…

இந்தப்படத்திற்கு என்னை அழைத்த போது நான் பொதுவாக சினிமா விழாக்களுக்கு வருவதில்லை என மறுத்தேன், நடிகர் சங்கத்திற்கு நிதி அளிப்பதாக சொன்னார்கள் நடந்தே வருகிறேன் என்றேன். இந்தப்படம் எல்லோரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் இது அடல்ட் படம் அல்ல, வெங்கட் பிரபு மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் தம்பியுடன் இணைந்து நல்ல படங்கள் தந்து வருகிறார். இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது…

என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை தான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்ற பொது இந்தக் கதை வந்தது, அருமையான கதை. மணிவண்ணன் பெரிய இடத்திற்கு செல்வார். அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார். என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் மூன்று பேருடன் இப்படம் செய்துள்ளேன். யுவனின் உதவியாளர் தான் பிரேம்ஜி. இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.”என்கிறார்.

Tags: அசோக் செல்வன்சிங்கரவேலன்பிரேம்ஜிபூச்சி முருகன்மன்மதலீலைவெங்கட்பிரபு.
admin

admin

Related Posts

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !
News

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !

by admin
September 22, 2026
ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் !  உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!
News

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

by admin
September 22, 2026
இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !
News

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

by admin
September 22, 2026
ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும்  ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !
News

ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

by admin
September 22, 2026
‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த  ‘நான் அவனில்லை’  ஜீவன்!
News

‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த ‘நான் அவனில்லை’ ஜீவன்!

by admin
September 22, 2026

Recent News

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் !  உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

September 22, 2026
இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

September 22, 2026
ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும்  ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

September 22, 2026
‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த  ‘நான் அவனில்லை’  ஜீவன்!

‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த ‘நான் அவனில்லை’ ஜீவன்!

September 22, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?