
பாலிவுட் பவர் ஹவுஸ் என ஊடகங்களால் வருணிக்கப்படும் தலைவி பட நடிகை கங்கனா ரனாவத்.எதிரிகளை வார்த்தைகளால் பந்தாடுவதில் சண்டிராணி .
அண்மையில் 35 வைத்து பிறந்த நாளை கொண்டாடிய இவர் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இளம்வயதில் நடிகர் ஆதித்ய பஞ்சோலியுடன் பாசமுடன் நேசமாக பழகிவந்த பருவ காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுதான் தன்னை பலசாலியாக மாற்றியது என்கிறார்.
“அந்த மனிதனுக்கு என்னுடைய தந்தை வயதுதான் இருக்கும்.அந்த ஆள் என்னை வலுவாக தாக்கியதில் நான் தரையில் விழுந்து விட்டேன்.தலையிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.அப்போது எனக்கு 17 வயதுதான் இருக்கலாம்.
எனது செருப்பை எடுத்து அந்த ஆளின் தலையில் பலம் கொண்டு அடித்தேன்.
எனக்கு ரத்தம் வழிந்தபோது அந்த ஆளின் தலையிலிருந்து வழியக்கூடாதா என்ன? ( ஹை ஹீல்ஸ் என்று நினைக்கிறோம் .) இன்று நினைக்கிறேன் நான் போராடப்பிறந்தவள் என்பதை.!என்றார் .
இவர் யாருடைய பெயரையும் சொல்லவில்லை என்றாலும் அந்த ஆதித்ய பஞ்சோலியைத்தான் குறிக்கும் என்பதாக சொன்னார்கள்.
பஞ்சோலியும் “அவள் ஒரு பைத்தியக்காரி “என்றதுடன் வழக்கும் தொடரப்போவதாக சொன்னார்.












