
கோலிவுட்டின் கொந்தளிப்பு இயக்குநர்களில் முக்கியமானவர் நெல்சன் திலீப் குமார்.
அண்மையில் வெளியாகி கடுமையான விமர்சனங்களுக்கு இலக்கான சன் பிக்சர்ஸின் பீஸ்ட் படம் இவரது இயக்கத்தில் வெளிவந்ததுதான்.! தளபதி விஜய்யின் இமேஜ் இந்த படத்தினை ஓரளவுக்கு உயர்த்திப் பிடித்தது.
நெல்சனின் அடுத்த படம் சன்பிக்சர்ஸின் தயாரிப்பில் வரவிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கிறார். பீஸ்ட்டின் தோல்வி இவரை மனதளவில் கூட பாதிக்கவில்லை. தன்னுடைய ரசிகர்களின் பலம் படத்தை காப்பாற்றி விடும் என்கிற நம்பிக்கை.!
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இன்னொரு பிரபல நடிகர் இணைகிறார் என்கிற தகவல் வந்திருக்கிறது. நெல்சனின் டாக்டர் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் சிவ கார்த்திகேயன். அவர்தான் பி-இடத்தில் நடிக்கப்போகிறார் என்கிறார்கள்
இந்த செய்தி உண்மையா என்பதை நெல்சன்தான் உறுதி செய்ய வேண்டும்.
இதுவரை நெல்சன் ஆக்சன் ஓரியண்டட் படங்களாகவே செய்திருக்கிறார். ரஜினியின் படத்தில் அரசியல் உண்டா என்பது தெரியவில்லை. அதை சன் பிக்சர்ஸும் ,நெல்ஸன் டீமும்தான் முடிவு செய்ய வேண்டும்.












