வர வர சினிமா செய்திகளே குறைஞ்சு போச்சு. ஓடிடி ,மியூசிக் ஆல்பம் ,தெலுங்கு படம்னு வர்ற நியூஸ்தான் அதிகமா இருக்கு.
என்னடா சோதனை என ஓடிடி படங்களை பார்த்தால் பொழுது ஒரு மாதிரியாதான்பே போகுது.கம்மாக் கரையில காத்து வாங்கிட்டு அத்த மகளை பக்கத்தில் உட்கார வச்சு தோளோடு தோள் ஒரசிக்கிட்டு இருக்குற மாதிரி ஒரு பீலிங்கு.!
இப்ப ‘குத்துக்குப் பத்து’ வலைத்தளத் தொடர் வருதாம். செமயா விளம்பரம் பண்ணிருக்காங் ய்ங்க !
‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் ‘குத்துக்கு பத்து’ என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கு..
‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ‘நவம்பர் ஸ்டோரீஸ்’ புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காய்ங்க .
‘குத்துக்குப் பத்து’ குறித்து இயக்குநர் பேசுகையில்,” காதல் விவகாரம் ஒன்றில் மத்தியஸ்தம் செய்ய விரும்பி காதலர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தும் போது நண்பன் மீது அடி விழுகிறது. இதன்பிறகு நடைபெறும் களேபரங்களும், சம்பவங்களும் தான் இதன் திரைக்கதை. ஒரே நாளில் நடைபெறும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வலைத்தளத் தொடர் ‘ஆஹா’ ஒரிஜினல் படைப்பாக வெளியாவதில் எங்கள் குழுவினருக்கு மிக்க மகிழ்ச்சி.” என்றார்.