
“இளையராஜாவினால் மோகனா ,மோகனால் இளையராஜாவா என்று விவாதம் செய்கிற அளவுக்கு ஒரு காலத்தில் மோகனின் படங்கள் இசையினால் விழா எடுத்தன!
கை நிறைய படங்கள் ,! காசும் புகழும் கொட்டோ கொட்டென கொட்டிய நேரம்.!
மோகன் நடித்த படங்களின் பாடல்கள் இன்று வரை நேயர் விருப்பமாக இருக்கிறது.!
நெடிய உறக்கம் முடிந்து எழுந்தது போல மோகன் ஓய்வு துறந்து திரைக்கு வரப்போகிறார்.
முந்தைய காலம் போல வரவேற்கப்படுவாரா மோகன்?
பார்க்கலாம். !
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வருகிற மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் சிறப்புக் காணொலி வெளியாகி இருக்கிறது.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் முன்னிலையில் வெளியிடப்பட்ட காணொளி பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் உலகத் தரத்தில் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஹரா படத்தின் டைட்டில் டீசர் 14 லட்சம் பார்வைகளை கடந்திருக்கிறது.
இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பையும் விரைவில் நிறைவு செய்து, படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர இயக்குநர் விஜய் ஸ்ரீ தலைமையிலான படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.
சாருஹாசன் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘தாதா 87’ மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கதைநாயகனாக அறிமுகமாகும் விரைவில் வெளியாகவுள்ள ‘பவுடர்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி மேக்கிங்கில், மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.
லியாண்டர் லீ மார்ட்டி படத்திற்கு இசையமைக்க, மனோ தினகரன் மற்றும் பிரஹாத் முனியசாமி ஒளிப்பதிவை மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பை குணா கையாள, படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.












