அட்ரா மச்சான் விசிலுக்காக உதயம் தியேட்டரில் ரசிகர்களை ‘காமெடி பீஸ் பவர் ஸ்டார்’ சந்திப்பதாகத் திட்டம். தயாரிப்பு தரப்பில் அறிவிப்பெல்லாம் கொடுத்தாச்சு!. பத்திரிகையாளர்களுக்கும் தகவல் பறந்தது! எல்லோரும் ஸ்பாட்டில் ஆஜர்! ஆனால், 3 மணிக்கு வருவதாக சொன்ன பவரை ஆளைக் காணலை! அடுத்து 4.30 மணிக்கு வருவார் என்றார்கள். ஆனால் ‘பவர்’ வரவே இல்லை. ஒன்றுக்கு நான்கைந்து முறை பவரைக் கேட்டு, அவர் அனுமதி பெற்ற பிறகே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்களாம் தயாரிப்பு தரப்பினர்.!. கிட்ட தட்ட மூனு மணி நேரம் காத்திருந்தவர்கள் வேறு வழியில்லாமல் முனுமுனுத்தாவாறே கலைந்து சென்றனர். இந்நிகழ்ச்சிக்காக தயாரிப்பு தரப்பிடம் கைநீட்டி காசு வாங்கிய நடிகர் கடைசி நேரத்தில் காலை வாரியதற்கு காரணம் இது தானாம்! அவருடைய ‘விக்’ கை பீரோவில் வைத்துப் பூட்டிக் கொண்டு போய்விட்டாராம் மனைவி. ‘விக் இல்லாமல் வெளியில் வந்தால் இமேஜ் டர்ர்ர்ர் …………..ராயிடுமே! .. அதான் சார் வரல’ என்று இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் காரணம் சொன்னாராம் பவர் ஸ்டார்!! ‘விக்’ இல்லாமல் பவரை பார்க்காதவர்கள் (கண் கூச…..!!) பார்த்துக்கொள்ளலாம்!