காதலித்து மணந்து கொண்டவர் சமந்தா. மண வாழ்க்கையில் கசப்பு. அக்கினேனி குடும்பம் சமந்தாவின் அணுகுமுறையை ,போக்கினை விரும்பவில்லை. கடைசியில் கணவர் நாக சைதன்யாவை கை கழுவி விட்டார் அதிகாரப்பூர்வமாக!
தனித்து வாழ்ந்த சமந்தாவுக்கு ஆறுதலாக இருந்தவை வளர்ப்பு பிராணிகள் ,நாய்களும் பூனைகளும்!
அவைகளுடன் சோசியல் மீடியாவில் தனது படங்களை வெளியிட்டு வந்தார்.
இதை பார்த்த ஒருவர் “நீங்கள் கடைசியில் நாய்களுடன்தான் தனிமையில் சாகப்போகிறீர்கள் ” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு நெத்தியடியான பதில் “அப்படி மரணிப்பதை கவுரவமாக கருதுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.
இதைப்பார்த்ததும் சாபமிட்டிருந்த அந்த நபர் பதிவை நீக்கிவிட்டார்.ஜென்டில்மேன்.