
மாவீரன் வீரப்பன் காட்டுக்கு காவல்காரன் என இன்னமும் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் வீரப்பனின் கஜானா என்கிற பெயரில் ஒரு படம் உருவாகியது.
சென்சாருக்குப் பயந்து தற்போது வெறும் ‘கஜானா’ என பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.கடேசி நேரத்தில் அவன் சொன்னான் இவன் சொன்னான் என சென்சார் கரைச்சல் கொடுப்பார்கள் என்கிற அச்சம்.
இந்த படத்தின் நாயகன் யோகிபாபு. முதன்மை பாத்திரத்தில் வேதிகா . இனிகோ பிரபாகர், சாந்தினி, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கி வரும் பிரபாதிஸ் சாம்ஸ் கூறுகையில்,” இதுவரை நடனத்திற்காக பாராட்டு பெற்ற வேதிகா, இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் அவதாரம் எடுத்திருப்பதோடு பல சாகச காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அந்த காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு,இப்படத்தில் நாயகி வேதிகாவுடன் மீனாக்ஷி தீக்ஷித்தும் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.
இக்காட்சி












