திருமணத்தில் சம்பந்திகளுக்குள்தான் சண்டை வரும் என்பார்கள். இது வழக்கமானது. பழகிப் போனது.ஆனால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் விளைவித்து விட்டது அந்த திருமணம் என புகார் பதிவாகி இருப்பது நயன்தாரா ,விக்னேஷ் சிவன் திருமணத்தில்தான்.!
மகாபலிபுரத்தில் திருமணம்.முடிந்த கையுடன் திருப்பதியில் தரிசனம். அங்கே செருப்புக்காலுடன் ஆலயத்தில் நடந்ததாக ஆதாரத்துடன் புகார். விக்னேஷ் – நயன் இருவரும் மன்னிப்பு கேட்டார்கள். அந்த சர்ச்சை அங்கேயே முடிந்தது.ஆனால் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ஒருவர் புகாரை தட்டி விட்டிருக்கிறார்.அந்த சமூக ஆர்வலர் எழுப்பிய சர்ச்சையும் நியாயமாகவே இருக்கிறது.
திருமணத்தைக் காரணம் காட்டிப் பொது இடமான கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படாதது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.