நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் செவ்வாய் இரவு காலமானார். வயது 48 .
இவ்வளவு இளம் வயதில் மரணமா ?
இவருக்கு நுரையீரலில் புற்று நோய் .இந்த வருஷம் மார்ச் மாதம்தான் கண்டு பிடித்தார்கள். இதற்கு முன்பு அவருக்கு கொரானாவும் வந்து குணமாகியிருக்கிறது.
நுரையீரல் புற்று நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க் கிழமை இரவு 7 மணியளவில் உயிர் பிரிந்திருக்கிறது. கொடிய நோய் பலி வாங்கிவிட்டது.
புதன் (இன்று ) மதியம் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடந்தன.
துயரில் ஆழ்ந்திருக்கிற மீனாவின் குடும்பத்துக்கு சினிமா முரசம் ஆறுதல் சொல்கிறது.