இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்மதுரை’ இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியீட்டுக்கு தயாராகிவிடும் என்கிறது படத் தரப்பு!
இந்நிலையில் இந்த படத்தின்பாடல் வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய்சேதுபதி டாக்டராக நடித்திருக்கும் இந்த படத்தில் தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.












