தளபதி விஜய்யின் பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டேயின் வேஸ்ட் பிலிமாகிவிட்டது. அது தோல்விப் படமாக அமைந்து விட்டதால் தமிழ்த் திரை உலகில் காலூன்ற முடியாமல் போய் விடுமோ என கவலைப்பட்டார் நடிகை..
இவரது கவர்ச்சியை தமிழக ரசிகர்கள் விரும்பவில்லையா என்கிற பதட்டம் வந்தது.
“கவலைப்படாதே “என்று கை கொடுக்கிறது சூர்யாவின் புதிய படம்.!
சிறுத்தை சிவா அண்மையில் பூஜாவை சந்தித்துப் பேசியிருக்கிறார் .ஆக்சன்-சென்டிமென்ட் படத்தில் நடிப்பது பற்றி பேசியிருக்கிறார். நடிகையும் தேதிகளை கொடுத்திருக்கிறார். ஆனால் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை, தெலுங்கில் பகத் சிங் படத்தில் நடிப்பதற்காக கொடுத்திருந்த தேதிகளை சூர்யா படத்துக்கு கொடுப்பார் என்று தெரிகிறது.
பகத் சிங் படம் கை விடப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.