
அபூர்ணாநந்தன் என்னும் சாமியாராக ஊருக்குள் நுழைகிறார் நிவின் பாலி. ஆலயத்தின் அருகில் உட்கார்ந்து இருந்த நிவின்பாலிக்கு சோதனைசொல்லாமலேயே வருகிறது. ஆலயத்தில் இருந்த அனுமார் சிலையை ஆட்டையைப்போட்டு விட்டார் என்று சொல்லி காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள். இந்த விசாரணையில்தான் டைம் ட்ராவலிங் வழியாக மன்னர் லாலும் கோர்ட்டில் ஆஜர்.
கோர்ட்டில் கற்பனை செய்திராத மேஜிக்கெல்லாம் நடக்கிறது. எல்லாமே ஜாலி..கேலி என அட்டகாசமாக போகிறது. நிவின் பாலியின் சாமர்த்தியமான வாதத் திறமையினால் அனைவரையும் கிளீன் போல்டாக்கிவிட்டு விடுதலையாகிறார் பாலி .சிறப்பான நடிப்பு.
கவர்ந்து வரப்பட்ட பேரழகியின் கண்ணீரை கோப்பையளவு குடித்தால் மன்னரின் விக்கல் நின்று விடும் என்று போகிற போக்கில் கிள்ளிவிட்டு போகிற நிவின்பாலியால் கோர்ட்டில் சிறப்பான காட்சியெல்லாம் அரங்கேறுகின்றன. அரசியல் சட்டம் அனுமதிக்காதவை எல்லாம் கற்பனையின் பெயரால் கதற கதற ….!
பேரழகியாக வருகிற ஷான்வி ஸ்ரீ வஸ்தாவுக்கு அருமையான கேரக்டர். சிரிக்கவைத்தாலும் அடித்து உதைத்து சித்திரவதை செய்தாலும் பொட்டுக்கண்ணீர் வராது .
ஜட்ஜ் சித்திக் .மனுஷனுக்கு மன்னனின் விக்கலை குணப்படுத்தி அனுப்பனும்கிற வெறி. அழகியை நிர்வாணப்படுத்தினாலாவது அந்த வலி தாங்காமல் அழுது வழிய மாட்டாளா ? பகிரங்க கோர்ட்டில் அதையும் செய்கிறார்கள்.!
சரி அப்புறம் எப்படி விக்கல் நிற்கிறது? கண்ணீரால்தான்.! அதை சொன்னால் படம் பார்க்கிறபோது சுவாரசியம் இல்லாமல் போய்விடும்? ஆசிப் அலிக்கு அரச நெறி தவறாத, கம்பீரமான அமைச்சர் வேடம். ஜெயலலிதா காலத்து அமைச்சர்கள் மாதிரி.! இப்பத்தானே எடப்பாடி ,ஓபிஎஸ் .நிமிந்து நடக்கிறாங்க.
சந்துரு செல்வராஜ் இருவேறு காலத்தில் பயணிக்கிற கேமராமேன் . வாழ்ந்திருக்கிறார்.மனுஷன்.!
மன்னராட்சியிலும் ,குடியாட்சியிலும் மக்களை எப்படியும் கொடுமைப்படுத்தலாம் ,ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி சாதித்துக்கொள்ளலாம் எந்த மத குரு சொல்லியிருந்தாலும் அந்த ஆளை திருக்கை வாலினால் நாலு இழு இழுக்கலாம் என்கிற கோபம் வரவே செய்கிறது.