
நடிக ,நடிகையரை இளம்வயதினர் வழிபடுகின்ற காலம் இது.
“பத்மினி இந்த இடத்திலதான் உக்காந்து இருந்தாங்களாம்” என்று மதுரை மீனாக்ஷி அம்மன் வடக்கு ஆடி வீதியில் இருந்த ஒரு இடத்தை தொட்டு கும்பிட்டு விட்டு சென்றதாக முன்னர் சொல்லப்பட்டது. இது கதையா ,அல்லது நக்கலா என்பதெல்லாம் தெரியாது.
அதாவது நட்சத்திர மோகத்தைப்பற்றி விளக்குவதற்காக இப்படி சொல்லியிருக்கலாம்.
இப்ப அதுக்கு என்ன பிரச்னை?

சொல்வோம்ல.!
“நீ கணக்கு பாடத்தை படிக்கிறதால என்ன பிரயோசனம்? ஒரு மண்ணும் இல்ல. ஆனா சரித்திரம் ,இலக்கியம் படிச்சின்னா மனுஷனாகிடுவே”
இப்படி மாணவர்களின் மனதில் தவறான எண்ணத்தை விதைத்திருக்கிறவர் ஜான்வி கபூர். தமிழகத்து ஸ்ரீதேவியின் புத்திரி.!தவறான புத்திமதியா இல்லையா ? ஒருவேளை கணக்கு பண்ணாதேன்னு சொல்வதற்காக இப்படி சொன்னாரா?
இப்ப சொல்லுங்க.சினிமாக்காரர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள்.என்ன பண்றது ?”












