எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ‘லால் சிங் சத்தா’வும் ஒன்று.
ஆமிர்கான் நடித்துள்ள இந்த படம் வருகிற 11 ஆம் தேதி வெளியாகிறது. இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள படம் . ஹாலிவுட் படத்தின் பாதிப்புதான் லால்சிங் சத்தா .
நாயகன் ஆமீர்கான்தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட.!
முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நடித்திருக்கிறார். இந்த கேரக்டரில் விஜயசேதுபதி நடிப்பதாக இருந்தது.
படத்தின் தமிழக விநியோகத்தை ரெட் ஜெயண்ட் பார்த்துக்கொள்கிறது.
சென்னையில் மும்பை பாணியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆமிர்கான் ,உதயநிதி ஸ்டாலின் ,செண்பகமூர்த்தி நாக சைதன்யா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் .
“இந்தி தெரியாது போடா “என்று கட்டாய இந்தி திணிப்பை கண்டித்த திமுகவை சேர்ந்த உதயநிதி ஸ்டாலினும் முக்கிய பிரமுகராக கலந்து கொண்டார்.
அவரிடம் “இந்தி படத்தை வெளியிடலாமா ?”என்று செய்தியாளர்கள் சிலர் கேட்டார்கள்.
அதற்கு உதயநிதி “எந்த மொழியும் நாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று யாரும்கட்டாயப்படுத்தக்கூடாது என்பதைதான் கூறி வருகிறோம்.
இது நாங்கள் வெளியிடும் முதல் ஹிந்தி படம் ஆகும். இதற்கு முன்பு சில தெலுங்கு படங்களை வெளியிட்டு இருக்கிறோம்” என்று பதிலளித்தார்.