
திரை உலகில் நயன்தாராவின் வளர்ச்சி அசுரத்தனமானது.பொதுவாக தமிழ்ச்சினிமாவில் நடிகைகளுக்கு திருமணம் நடந்து விட்டால் மவுஸ் குறைந்து விடும் என்று சொல்வார்கள். ஆனால் நயன் விஷயத்தில் அப்படி எதுவும் மவுஸ் குறைந்து விடவில்லை.
ஏனென்றால் கல்யாண வாழ்க்கையை காதலித்தபோதே நன்றாக அனுபவித்துவிட்டதால் ,அதை பகிரங்கப்படுத்திக்கொண்டே ஹனிமூன்களை அனுபவித்ததால் ரசிகர்களுக்கு பழகிப்போய்விட்டது.இன்றும் அவரை மிஸ் நாயனாகவே பார்க்கிறார்கள். குழந்தை பெற்றால் ஒருவேளை மார்க்கெட் மங்கிவிடலாம்.
நயன் தன்னுடைய சம்பளத்தில் சமரசம் செய்கிற வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.
முன்னொருகாலத்தில் 3 கோடி சம்பளம் வாங்கியவர் ‘அந்ததுன்’படத்துக்குப்பின்னர் 5 கோடிக்கு நடிக்க வந்தார்.
தற்போது 7 கோடி சம்பளமும் தினசரி பேட்டாவாக 1 லடசமும் கேட்கிறாராம் .இந்த ஒரு லட்ஷம் அவருடன் வருகிற துணை கிரகங்களுக்கு !
ஹோட்டல் பில் ,நயன் மற்றும் உதவியாளர்களது விமான கட்டணம் ,மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவைகளை கூட்டினால் 10 கோடி வந்து விடுகிறது .இதனால் தெலுங்கு பட உலகில் அவர் இனியும் நடிக்க முடியாது என்கிறார்கள் ஆந்திராவில்.!
தமிழ்நாட்டின் நிலவரம் இன்னும் தெரியவில்லை.
.












