Monday, May 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘கணம்’ படம் நிகழ்வுகள்.! பத்திரிகையாளர் சந்திப்பு .மனம் திறந்த நடிகர்கள்.!

admin by admin
September 4, 2022
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள கணம் திரைப்படம் வரும் 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது.

You might also like

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

இந்த மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில் சூர்யா

‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M பார்வைகளை கடந்து சாதனை!!

இத்திரைப்படத்தில் சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களுடன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்  படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்வில் கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது…….,

“இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களின் புன்னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே உலகம் அழியப்போகிறது என்பது போன்ற பெரிய விசயங்களைத் தான் பயன்படுத்துவார்கள்.

ஆனால், பாசத்தை மையமாக வைத்து டைம் ட்ராவல் படத்தை அழகாக நகர்த்த முடியும் என்று இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் திரைக்கதையில் செய்து காட்டியிருக்கிறார். இசையில் மெலடியை அழகாகக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலில் பணியாற்றும்போது, நேரத்தைக் கைப்பற்ற முடிந்தது. அப்படத்தில் ‘இன்னும் நேரா காயங்களை எப்படி ஆற்ற’ என்ற வரிகள் மிகவும் எனக்குப் பிடிக்கும். என்ன நடந்து கொண்டிருக்கிறது  என்று அவனுக்குத் தெரியும். ஆனால், அந்தக் காயம் இன்னும் வரவில்லை. இப்படி இன்னும் நேராத காயத்தை எப்படி நான் ஆற்றப் போகிறேன்? என்று கேட்கக்கூடிய கேள்வி தான் அந்த வரி.

ஒரு நபர் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ?அவர்களும் அதே இடத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால், காலம் உங்களைப் பிரித்து வைத்துவிடும். பொதுவாக நாம் இங்கிருந்து இவ்வளவு கிலோமீட்டர் என்று புவியியல் தூரங்களைப் பற்றித் தான் பேசுவோம். ஒரே இடத்தில் இருந்துகொண்டே நேரம் தூரமாக இருக்க முடியுமா? இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் ஆனால், வெவ்வேறு காலகட்டத்தில் இருக்கிறார்கள். அப்போது அந்த நேரத்தை கைப்பற்றக் கூடிய வரிகளை ஆராய முடிந்ததற்கு ஸ்ரீக்கு நன்றி. இதுமாதிரி புதுப் புது வகையான படங்கள் வரும்போதுதான் சவாலான வரிகளை எழுத முடியும். வித்தியாசமான விசயங்களையும் செய்ய முடியும்.

நடிகர் கார்த்தி இவ்ளோ அழகாகப் பாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. இம்மாதிரியான படத்திற்கு அழகாக தொகுத்து வழங்க நாசர் சாரால் தான் முடியும். அவரைத் தவிர வேறு யாரையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை. இப்படத்தில் பணியாற்றிய ரீத்து, சின்ன வயது பசங்கள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். வித்தியாசமான கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரசிகர்களுக்கு புதுமுகங்களை வைத்து படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் ட்ரீம் வாரியர் நிறுவனம் எஸ்.ஆர். பிரபுவிற்கும், ஸ்ரீ கார்த்திக்கும் நன்றி” என்றார்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் ,ஒளிப்பதிவாளர் சுஜித் ஆகியோரும் சுருக்கமாக கருத்துக்களை சொல்லி வைத்தனர்.

நடிகர் நாசர் பேசும்போது………

“4 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் டைம் மெஷின் தரை இறங்கி இருக்கிறது. ஒரு தயாரிப்பாளரே அழைத்து இயக்குநரிடம் கதை கேளுங்கள் என்று கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபு    ஒரு படம் மாதிரி இன்னொரு படம்  தயாரிப்பில் இருக்கக் கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பார். அவர் ஸ்ரீ கார்த்தியைக் கண்டுபிடித்தது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், சைன்ஸ் பிக்ஷன் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான விசயம்.

இந்தியாவில் இது போன்று படம் அதிகம் வருவதில்லை. ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போது குழந்தை மாதிரி மாறி விட்டேன். நிறையப் பேசினோம் இந்த விசயங்கள் புரியாது அந்த விசயங்கள் புரியாது, என்று பல மணி நேரம் சண்டை கூடப் போட்டு இருக்கிறேன்.

இந்தக் கதையை ஜுராசிக் பார்க் படத்தில் அந்தத் தாத்தா கூறுவதுபோல விளக்கமாகக் கூறினால் தான் புரியும் என்றேன். ஆனால் இப்படம் எனக்கு அற்புதமான பயணமாக இருந்தது. அறிவியலைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் நிறைய விசயங்களைப் பேசினோம். இந்தக் குழுவுடன் பணியாற்றியதில் 30 வயது குறைந்தது போல உணர்ந்தேன்.
ஒரு புத்தகத்தில் அழகான கதை இருக்கவே இருக்கிறது என்றால் அதில் உள்ள காகிதங்கள் தான் நான். உண்மையாகவே ஒரு தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் கதை. அமலா அழகான ஆன்மா கொண்டவர். அவரின் அறிமுகக் கால கட்டத்தில் இருந்தே பழக்கம்.  அவர் இந்தத் துறைக்கு மீண்டும் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு டைம் டிராவல் தேவையே இல்லை. அந்தக் காலம் உறைந்து, அப்போது இருந்தது போலவே இருக்கிறார். அவரைப் பார்ப்பதை விட பேச வைத்துக் கேட்டால் அழகாக இருக்கும். பேச்சில் தெளிவு, பரிவு, பாசம் அனைத்தும் நிறைந்திருக்கும். ஆகையால் தான் நான் தள்ளி நின்று கேட்டுக்கொண்டே இருந்தேன்.
அமலா கதாபாத்திரம், என்னுடைய கதாபாத்திரம், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் தேடித் தேடிக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக். சின்ன பசங்களைப் பார்க்கும்போது சாயலில் அவர்கள் போலவே இருக்கிறார்கள்.
இப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இந்தத் தருணம் மறுபடியும் கிடைத்தால் நான் தவறு செய்யும்போது அதை செய்யாமல் இருக்க முடியாதா? என்று தோன்றும். ஒரு காலத்தில் கோட்பாடு ரீதியாக இது நடக்கக் கூடும். அதை இந்தப் படத்தில் நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
இந்த படம் பொழுதுபோக்கான படம் என்பதை விட ஈடுபாட்டுடன் பார்க்கக்கூடிய படம் என்று சொல்வதே சரியாக இருக்கும். 2 1/2 மணி நேரம் சிரித்துக்கொண்டே இருக்கும் படம் கிடையாது. நம் மனதினுடைய மெல்லிய உணர்வுகளைத் தூண்டி விடணும். அது இப்படம் நிச்சயம் செய்யும்.
நான் கார்த்தியிடம் வயதானவன் போல் மேக்கப் போடுவதற்கு பதிலாக வயதானது போல் நடித்து விடுகிறேன் என்றேன். இல்லை சார் வயதானவர் போல் நடிக்க வேண்டாம் இருந்தாலே போதும் என்றார். இதற்காக கார்த்தியுடன் வாக்குவாதமே நடந்தது.

இப்படத்திற்கு என்னுடைய கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவதற்கு 2 மணி நேரம் ஆகும். இந்த உலகத்தில் மிகவும் பொறுமையாக இரசிக்கக் கூடிய, உள்வாங்கக் கூடியவர் கமல் சார்தான். உடம்பெல்லாம் எப்படி மேக்கப் போடுகிறோ என்று தெரியவில்லை. இந்தப் படத்திற்கு மேக்கப் போடுவது விலை உயர்ந்த விசயம். இதற்காக பிரபு பெங்களூருவில் இருந்து சிறப்பு நிபுணரை வரவழைத்தார். பிரபு எனக்கும் கார்த்திக்கும் மட்டுமல்ல, இந்தப் படத்திற்கு என்ன தேவையோ? அதை எல்லாவற்றையும் வழங்கினார்.

ஷர்வானந்துடன் சில படங்களில் பழகியிருக்கிறேன். விடா முயற்சி என்பது பழக்கமான வார்த்தையாக இருந்தாலும், ஷர்வானந்துக்கும் பொருந்தும். நானும் அவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அதில் அவருக்கு எது மேலே பட்டாலும் துடைத்துக்கொண்டே இருக்கும் படியான கதாபாத்திரம். அதை மிக அழகாகச் செய்திருந்தார். அந்தப் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கிறார்.
ரீத்து சிறு வயது முதலே என்னுடன் நடித்துக் கொண்டு இருக்கிறது. நாங்கள் இருவரும் தீனி படத்தில் நடித்தோம். ஒரு சிறிய தீவு, அதிலிருந்து வெளியே போகவே முடியாது. ஒரு நாளில் 2 மணி நேரம் தான் கடல் உள்வாங்கும், அந்தச் சமயத்தில் தான் சென்று வர முடியும். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தீவிரமாக எடுத்துக் கொண்டு நடிக்கக் கூடியவர். இப்படத்திற்கும் அவருடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் எல்லா மனங்களையும் போய்ச் சேரும் “என்றார்.

மற்றும் நடிகர் ரவி ராகவேந்திரா, மாஸ்டர் ஜெய் , மாஸ்டர் ஹித்தேஷ் , மாஸ்டர் நிதேஷ்,  ரமேஷ் திலக், நடிகர் சதீஷ், இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் ஆகியோரும் பேசினார்கள் .

நடிகை அமலா பேசும்போது……

“ஒரு படத்தைப் பற்றி சாதாரணமாக இவ்வளவு பேச மாட்டார்கள். என்னுடைய இளமைக் காலத்தில் ஆதரித்த தமிழ் மக்களிடம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மாவாக வந்திருக்கிறேன். இப்படம் எனக்கு மிக மிகச் சிறப்பான படம்.
எங்கிருந்தாலும், எப்போது இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இந்தப் படம் அனைவரையும் இணைக்கும். உங்களைச் சிரிக்க வைக்கும் அர்த்தமுள்ள படம். ஆழமான அன்பை உணர்வுபூர்வமாக அழகாகக் கொடுத்திருக்கிறார் ஸ்ரீ கார்த்திக். அம்மாவாக இருக்கும் அனைவருக்கும், போராட்டங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இணைக்கும்.
இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைகிறேன். இந்தக் கதாபாத்திரம் கொடுத்ததற்கு ஸ்ரீ கார்த்திக்கு நன்றி. உங்கள் அம்மாதான் இந்தப் படத்திற்கு உத்வேகம் கொடுத்தார் என்று எனக்குத் தெரியும். இந்தப்படத்தை அவரும் நம்முடன் பார்த்து நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன்.
எஸ்.ஆர்.பிரபு, நீங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த தயாரிப்பாளர். உங்களுடைய எல்லாப் படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சினிமா துறையில் இருக்கும் இளம் கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள். இப்படத்தின் குழுவுடன் பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் எந்தப் படம் பார்த்தாலும் பார்வையாளராகத் தான் பார்ப்பேன். வரும் செப்டம்பர் 9 ஆம் தேதியும் இப்படத்தை பார்வையாளராகப் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.

நடிகர் ஷர்வானந்த் பேசும்போது……..

“எங்கேயும் எப்போதும் படத்திற்குப் பிறகு ஏன் நீங்கள் தமிழில் நடிக்கவில்லை என்று கேட்டார்கள். கணம் படம் போன்று கதைக்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன். நான் கதையை மட்டுமே நம்பி இருக்கிறேன். நமக்கு எப்போதும் எஸ்.ஆர்.பிரபு போன்ற தயாரிப்பாளர்கள் தேவை. இப்படத்திற்குத் தூண் போல் இருந்திருக்கிறார். ரவி ராகவேந்திரா போன்று அருமையான நடிகரை யாரும் பார்க்க முடியாது. நாசர் சார், ரீத்து வர்மா இயற்கையாக நடிக்கக் கூடியவர்கள். இப்படத்தின் மூலம் சதீசும், ரமேஷும் நண்பர்களாகக் கிடைத்திருக்கிறார்கள்.
அமலா மேடமை எப்போது பார்த்தாலும் அம்மாவாகத் தான் தோன்றும். இந்தப் படம் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் உடைய படம். இன்னும் 5 வருடங்களுக்கு இது போன்று படம் வருவது சாத்தியமில்லை. இந்தியாவின் சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது…..

“அருவி படத்தின் கதையைக் கேட்கும் போது திரையில் சிறப்பாகக் கொண்டு வரமுடியும் என்று நம்பிக்கை எப்படி வந்ததோ அதே நம்பிக்கை ஸ்ரீ கார்த்திக் கதை கூறும்போது வந்தது. இப்படத்தை பட்ஜெட் படமாக எடுப்பதை விட நிறைய செலவு செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீயிடம் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக நீங்களே எடுங்கள் என்று கூறினார்.
மாயா படத்தில் இருந்தே ஒவ்வொரு கதையையும் ஷர்வானந்துக்கு அனுப்பிக் கொண்டே இருப்பேன். ஆனால், இந்தக் கதையைக் கேட்டு உடனே ஒப்புக் கொண்டார். அமலா மேடமிடம் இந்தக் கதையைக் கூறுவதற்குத் தயக்கம் இருந்தது. இருந்தாலும், இந்தப் படத்தில் நடிப்பது பற்றி அவரே முடிவெடுக்கட்டும் என்று நினைத்தோம். அவர் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஸ்ரீ ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெடுவார். தொழிற்துறையில் காலகட்டத்திற்கு ஏற்ப அதைப் புரிந்து கொண்டு அந்தத் துறையை மேம்படுத்தக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். அப்படி ஒருவர் தான் ஸ்ரீ கார்த்திக். படம் மட்டுமல்ல, பாடல்களுக்கும் உடன் இருந்து பணியாற்றினார். ஒவ்வொரு படம் பார்க்கும் போதும் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற நடுக்கம் இருக்கும். ஆனால், இப்படத்தில் அது இல்லை.
டைம் ட்ராவல் மற்றும் உணர்வுபூர்வமான விசயங்களும் ஒன்றாகப் பயணிக்கும் போது திருப்தியாக இருக்கும். நிறையக் காட்சிகள் இல்லையென்றாலும், கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால் சரியாகப் புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்த ரீத்து வர்மாவிற்கு நன்றி.
சமீபமாக எங்கள் நிறுவனப் படங்கள் ஓடிடியில் வெளியாவதால் இனிமேல் இப்படித்தான் இருக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு அப்படியில்லை என்று கூறினேன்.இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது”

இவ்வாறு அவர் பேசினார்.

Tags: அமலாஎஸ்.ஆர்.பிரபுகணம்சர்வானந்த்நாசர்ஸ்ரீ கார்த்திக்
admin

admin

Related Posts

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 24, 2026
இந்த மாதிரியான  ரியாக்ஷனை  தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில்   சூர்யா
News

இந்த மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில் சூர்யா

by admin
May 24, 2026
‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M  பார்வைகளை கடந்து சாதனை!!
News

‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M பார்வைகளை கடந்து சாதனை!!

by admin
May 24, 2026
ஜூலையில்  வெளியாகும்  மாதவனின்  ‘ஜி.டி. நாயுடு’!
News

ஜூலையில் வெளியாகும் மாதவனின் ‘ஜி.டி. நாயுடு’!

by admin
May 23, 2026
ரொமான்ஸ்  காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’!
News

ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’!

by admin
May 23, 2026

Recent News

இந்த மாதிரியான  ரியாக்ஷனை  தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில்   சூர்யா

இந்த மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில் சூர்யா

May 24, 2026
‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M  பார்வைகளை கடந்து சாதனை!!

‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M பார்வைகளை கடந்து சாதனை!!

May 24, 2026
ஜூலையில்  வெளியாகும்  மாதவனின்  ‘ஜி.டி. நாயுடு’!

ஜூலையில் வெளியாகும் மாதவனின் ‘ஜி.டி. நாயுடு’!

May 23, 2026
ரொமான்ஸ்  காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’!

ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’!

May 23, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?