
“இனி இதற்கு வாய்ப்பே இல்லை .ஆகவே புதிய கதையைத் தொடங்கு ” என்று ஒரு அப்பா தன்னுடைய மகளை முன்னாள் கணவனின் போட்டோவுடன் போட்டு புலம்பியிருந்தால் என்ன அருத்தம்?
டைவர்ஸ் ஆன ஆளுடன் மறுபடியும் கூடி குடும்பம் நடத்த முடியாது என்றுதானே அர்த்தம்?
“புதிய கதையை தொடங்கு !” அதாவது புதிதாக கணவனை தேர்ந்து எடு .வாழ்க்கையை தொடங்கு என்பதை தானே அவரது டிவீட் வலியுறுத்துகிறது.
புரிஞ்சிக்கோம்மா சமந்தா என்று மகளுக்கு சேதி விட்டிருக்கிறார் அப்பா ஜோசப் பிரபு. !சேதியுடன் மகள் சமந்தாவுடன் முன்னாள் மருமகன் இருக்கிற படமும் இணைக்கப் பட்டிருக்கிறது.
அக்டொபர் 2021 -ல் மணவிலக்கு அறிவிக்கப்பட்டு தனித்த வாழ்க்கை என்றாகிப்போன சமந்தாவின் வாழ்க்கையில் புதிய வசந்தம் வருமா ?












