
ரோலக்ஸ் சூர்யாவின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 5நாட்கள் நடந்திருக்கிறது.
சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.படத்தைப்பற்றிய ஒரு மோஷன் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பத்து மொழிகளில் தயாராகிற இந்த புதிய படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.சூர்யா 42 என்பதாக சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு (13-ஆம் தேதி ) கோவாவில் தொடங்குகிறது. அதில் சுமார் 250 காட்சிகளை படமாக்குகிறார்கள்..
மோஷன் போஸ்டரில் வரலாற்று பின்னணியில் காட்சிகள் அமைந்துள்ளன. அரந்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனந்தார் ஆகிய பெயர்கள் பதிவிடப்பட்டுள்ளன.
அவர்களை சுற்றி கதைப்பின்னப்பட்டிருக்கலாம். வேல், அம்புகளுடன் போர்க் களத்தை சூர்யா பார்க்கும் வகையில் நின்றுகொண்டு இருக்கிறார். இதனால் படம் எப்படி இருக்கும் என்கிற ஆவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.












