Tuesday, June 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“அஞ்சலியுடன் நல்ல நட்பில் இருக்கிறேன்”நடிகர் ஒப்புதல் வாக்குமூலம்.!

admin by admin
September 16, 2022
in News
421 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு.

You might also like

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

சேத்தன் சீனுவின் பூர்விகம் தெலுங்கு என்றாலும் இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான்.

மாடலிங் மூலமாக விளம்பரப்பட வாய்ப்புகள் வரவே, கார்னியர், சாம்சங், டாமினோஸ், ஜாய் ஆலுக்காஸ் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

அப்படியே சினிமாவுக்கென முழுதாக தயாரான சமயத்தில் தான், கருங்காலி படத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு இயக்குனர் மு.களஞ்சியம் மூலமாக சீனுவின் வீட்டுக்கதவை தட்டியது.. அதை தொடர்ந்து இவரை அழைத்து நான் சிவப்பு மனிதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் நடிகர் விஷால்.

இந்த படங்களின் மூலம் கிடைத்த வரவேற்பால் தெலுங்கில் அடியெடுத்து வைத்ததும் அங்கே முதல் படமாக நடிகை சார்மி கதாநாயகியாக நடித்த மந்த்ரா-2 என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

ராஜூ காரி கதி.. என்கிற படம் மூன்று கோடியில் தயாரானது.  இந்தப்படம் 18 கோடி வசூலித்து மிகப்பெரிய ஹிட் ஆனது.

“இந்தப்படத்தில் ஒரே கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தேன்… அதற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. மேலும் சுனைனா கதாநாயகியாக நடித்த பெல்லிக்கி முந்து பிரேமகதா என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்தேன். அதை தொடர்ந்து சில வாய்ப்புகள் தேடி வந்தாலும் கூட, நல்ல கதைகளுக்காக காத்திருந்தேன்.”என்கிற சேத்தன் தற்போது ஒரு நடிகையின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

புன்னகை பூவே, கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி இப்போது இயக்குனராக மாறி தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படத்தை  இயக்கி வருகிறார். அந்தப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார்.

இந்தப்படத்தில் நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இதில் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள சித்தி இத்னானியும் ஒருவர். அவர்தான் படத்தில் எனக்கு பிரதான ஜோடியாக நடித்துள்ளார். சுகாசினி, ஸ்ரீகாந்த், உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போதும் எனது முதல் பட கதாநாயகி அஞ்சலியுடன் நல்ல நட்பு தொடர்கிறது. காவேரி கல்யாணி இயக்கிய படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க அஞ்சலியை கேட்டோம். சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.. ஆனால் கோவிட் காரணமாக அவர் நடித்துவந்த படங்களின் தேதிகள் மாறியதால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை..

இதுதவிர தெலுங்கு, மற்றும் தமிழில் உருவாகி வரும் வித்யார்த்தி என்கிற படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் இதன் டைட்டில் பரிசீலனையில் உள்ளது. ஆணவக்கொலையை மையப்படுத்தி உண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளது இதுவும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

இந்த இரண்டு படங்களும் தமிழிலும் வெளியாவதால் இதன்மூலம் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு திரும்புகிறேன். அதுமட்டுமல்ல, தற்போது ஆஸ்திரேலிய தயாரிப்பாளர் ஒருவரின் தயாரிப்பில் தமிழில் உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன்….

கோவிட் காலகட்டத்தில் நிறைய ஒய்வு நேரம் கிடைத்தது. அந்த சமயத்தில் விஸ்காம் ஸ்டூடன்ட் ஆன என்னுடைய தங்கையுடன் இணைந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்திற்காக போராடிய வி.வி.எஸ்.ஐயர், சத்ரபதி சிவாஜி, வேலுத்தம்பி தலவா, வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் என 12 சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை ஆக்டர் என்கிற பெயரில் ஆந்தாலாஜி படமாக எடுக்கலாம் என முடிவு செய்து 12 எபிசோடுகளுக்கான கதைகளையும் நானும் என் தங்கையும் இணைந்து உருவாக்கியுள்ளோம்…

அதாவது அவர்களது வாழ்க்கையில் நடந்த, முக்கியமான, அவர்கள் மிக தீரமாக எதிர்கொண்ட ஒரு விஷயத்தை மையமாக வைத்து, இருபது நிமிடங்கள் என்கிற அளவில் ஒவ்வொருவரின் எபிசோடையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்…

அதற்கு முன்னதாக வேலு நாச்சியார் உட்பட இந்த 12 கதாபாத்திரங்களிலும் நானே நடிக்கிறேன் என்பதால் இதற்காக கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக எனது உடல் எடையை ஏற்றி இறக்கி, முடியை ஒவ்வொரு கதாபாத்திரத்திரும் ஏற்றாற்போல் வளர்த்து அந்தந்த கதாபாத்திரங்களாக மாறி, ஒவ்வொரு எபிசோடுக்கான பைலட் சூட்டையும் நடத்தி முடித்துள்ளோம்..

இந்த கதைகளை அழகாக திரைக்கதை அமைத்து வடிவமைத்து தரும்படி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களுக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத்தை அணுகியுள்ளோம்.. அவரை நேரில் சந்திக்கும்போது நாங்கள் உருவாக்கிய கதையுடன் இந்த பைலட் காட்சிகளையும் அவரிடம் காட்ட இருக்கிறோம். முழுமையான திரைக்கதை கிடைத்தவுடன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளோம்.

இதுதவிர இந்த 12 கதாபாத்திரங்களில் நடிக்கும் எனது 12 விதமான தோற்றங்களை கொண்டு ஒரு அழகான காலண்டர் ஒன்றை வடிவமைக்கும் யோசனையும் மனதில் இருக்கிறது.. இந்த படமும் இந்த காலண்டரும் கூட நாளை எனக்கான புதிய வாசலை திறந்துவிட கூடும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. .”என்கிறார் சேத்தன் சீனு.

 

Tags: அஞ்சலிகாவேரி கல்யாணிசேத்தன் சீனுஜான் பி.ஆர்.ஓவேலு நாச்சியார்
admin

admin

Related Posts

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!
News

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

by admin
June 16, 2026
‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!
News

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

by admin
June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!
News

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

by admin
June 15, 2026
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!
News

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

by admin
June 15, 2026
நெட்ஃப்ளிக்ஸில்  சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!
News

நெட்ஃப்ளிக்ஸில் சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

by admin
June 15, 2026

Recent News

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

June 15, 2026
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

June 15, 2026
நெட்ஃப்ளிக்ஸில்  சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

நெட்ஃப்ளிக்ஸில் சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

June 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?