பெரிய பத்திரிக்கை ,சிறிய பத்திரிக்கை என்கிற பாகுபாடின்றி பழகுகிறவர் தனுஷ்.
கதைக்கு முக்கியத்துவம் இருப்பின் அதை கோடிகள் கொட்டி வளர்ப்பவர் கலைப்புலி தாணு..
மிகப்பெரிய அளவில் அந்த படத்துக்கு விளம்பரம் செய்வார். அண்டார்டிகா விளிம்பில் வாழ்கிற ஆராய்ச்சியாளனுக்கும் அந்த சேதி போய் சேரும் .
கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்திருக்கிற வி..கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு வும் , வித்தியாசமான கதை களத்திற்கு பெயர் போன இயக்குநர் செல்வராகவனும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியம் தான் ‘நானே வருவேன்’.
தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் .. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சில தினங்களுக்கு முன் வெளியான ‘வீரா சூரா’ பாடல் ஏற்கனவே 8 நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது எனும் சாதனையை படைத்து உள்ளது .
செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர், அண்மையில் வெளியாகியது. வெறும் வாய்மொழிப்பேச்சாக இல்லாமல் உண்மையிலேயே தனுஷின் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது..
திருவிழா மாதிரி மிகப் பிரமாண்டமாக ரோகிணி திரையரங்க வளாகத்தில் எல் இ டி திரையில் பிரத்தியேகமாக வெளியாகியது.
ரசிகர்களையும் திரைப்பட விரும்பிகளையும் வெகுவாக எதிர்பார்க்க வைத்திருக்கிறது தனுஷின் ‘நானே வருவேன் .
படத்தின் வெற்றிக்கான பணிகளை முன்னெடுத்து செல்கிறார் பி.ஆர்.ஓ ரியாஸ்.












