
பிரிவதும் மறுபடியும் இணைவதும் காதலர்க்கு இணக்கமானதுதான்!
‘லைகர் ‘தோல்வியால் துவண்டு போன விஜய் தேவரகொண்டா ,ராஷ்மிகா மந்தனா மீது வெறுப்பில் இருந்தார்.
பழகிய நாட்கள் சுகமான நாட்கள் என்பதை மறந்து துறவு நிலையில் துயில் கொண்டார்.
ஆனால் புஷ்பாவின் அபாரமான வெற்றி ராஷ்மிகா மீதான வெறுப்பை குறைத்தது.
இந்த ஜோடி இணையுமா என எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்களும் ,தயாரிப்பாளர்களும்.!
அந்த நல்ல நாளும் வந்தது.
மாலத்தீவு செல்வதற்காக தனியாக வந்திறங்கினார் ஏர்போர்ட்டில் ராஷ்மிகா.!
சற்று நேரத்தில் கனத்த கருப்புக்கண்ணாடியுடன் அதே ஏர்போர்ட்டுக்கு வந்தார் தேவரகொண்டா !
இருவரும் தனித்தனியாக வந்து ஒரே விமானத்தில் மாலத்தீவு பறந்தனர் .
அங்கே அவர்கள் சேர்ந்தார்களா என்பது தெரியாது.
ஆனால் தேவரகொண்டாவின் கனத்த கருப்புக்கண்ணாடி ராஷ்மிகா மந்தனாவின் முகத்தில்!
இது எப்படி?
இருவருமே இணைந்து விட்டனர் என்பதற்கு அந்த காக்கிள்ஸ் சாட்சியமாக இருந்து விட்டது.
மாலத்தீவு ..காதலர்க்கு அது ஆனந்த பூமி. புதிய தம்பதியருக்கு அது தேனிலவு சொர்க்கம்.!
இதில் எதுவாக இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிறப்புதான்.!












