வெற்றி பெற்றால் மகிழ்ச்சி,அதிலும் மாபெரும் வெற்றி என்றால் அதிரடியாக கொண்டாடுவோம்ல.!
பொன்னியின் செல்வன் முதல் பார்ட் செம கலெக்சன்.
தயாரிப்பாளர்கள் லைகா சுபாஷ்கரன் ,மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்னம் இருவருக்கும் கல்லா ரொம்பி வழிவதில் செம ஹாப்பி.
மணி ரத்னம் அவருடைய பெசன்ட் நகர் வீட்டில் நடிக நடிகையர் மற்றும் முக்கிய டெக்னி ஷியன்களுக்கு உற்சாக பான விருந்து கொடுத்து அசத்தினார்.
இசை அமைத்த ஏஆர் ரகுமான் அவரது இசைக்குழுவினர்க்கு விருந்து கொடுத்திருக்கிறார்.
உலகநாயகன் கமல்ஹாசன் குரல் கொடுத்து அதிரடியான ஓப்பனிங் கொடுத்ததற்காக தனி விருந்து .
தற்போது லைகா சுபாஷ்கரன் வருகிற சனிக்கிழமை பெரு விருந்து கொடுத்து அசத்தப்போகிறார் என்கிறார்கள்.நினைவுப்பரிசும் உண்டாம்.
விழுந்து விழுந்து விமர்சனம் எழுதிய பத்திரிகையாளர்களை எல்லோருமே மறந்து விட்டார்கள் என்பதுதான் பேனா எடுத்தவனின் விதி.! நன்றி சொன்னால் குறைந்து விடுமா?
நல்லாருப்பிங்கப்பா !!!