
என்னதான் வசதியான வாழ்வு,ஆதரவு ,செல்வாக்கு இருந்தாலும் ஏதாவது ஒன்றில் மனம் அப்செட்டாகி விடுகிறது.
சூப்பர்ஸ்டார் மட்டும் விலக்காகி விடுமா?.
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து ‘டான்’ பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப் போவதாக சொல்லுகிறார்கள்.
இளைஞர்களுடன் பணியாற்றினால் கால மாறுதலுக்கேற்ப புதிய சிந்தனை பிறக்கும் என்பது நம்பிக்கை. இதனால் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதற்கு தயங்கினார்.வாய்ப்பு லாரன்சுக்கு போய்விட்டது.
“புதியவர்களுடன் சேர்ந்து பணியாற்றினால் வேலை செய்வதற்கு எளிது,எல்லாமே புதிதாக இருக்கும் என்று நம்பினேன்.ஆனால் அவர்களுடன் என்னால் ஒத்துப்போக முடியல. வேறு வழியில்லை..படத்தை முடிச்சு கொடுக்கிறேன் . பி.வாசு படத்தை நான் விட்டிருக்கக்கூடாது.” என்று ரஜினிகாந்த நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.












