
திரையுலக அதிசயங்களின் சங்கமம்தான் உலகநாயகன் கமல்ஹாசன்.
அர்ப்பணிப்புடன் இந்திய சினிமாவில் பல அற்புதங்களை நிகழ்த்திய முதல் மனிதர்.
இவர் தற்போது 90 வயது முதியவராக இந்தியன்.2.வில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நடிகர் சித்தார்த்தின் ஜோடியாக நடித்துவருவதாக சொல்லப்படுகிறவர் ராகுல் பிரீத் சிங். அதாவது யூ டியூப் சேனல் நடத்துகிறவரின் மனைவி.
இவர் உலகநாயகன் பற்றி தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
“90 வயது முதியவராக நடித்துக்கொண்டிருக்கிற கமல்ஹாசன் படப்பிடிப்புத் தளத்துக்கு விடிகாலை 5 மணிக்கே வந்து விடுகிறார். பத்து மணி வரை பிராஸ்தடிக் மேக்கப் போட்டுக்கொள்கிறார். பின்னர் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட் வந்து விடுகிறார். அர்ப்பணிப்பு .இவரைப்போல இந்திய சினிமாவை முழுமையாக அறிந்திருப்பவர் வேறு எவருமில்லை.
பிரஸ்தடிக் மேக் அப் கலைக்க 2 மணி நேரம் ஆகிறது.அதுவும் கடும் வெயில் நேரத்தில்.!ஆனால் அதைப்பற்றி மனிதர் சற்றும் கவலைப்படவில்லை.அவர் புதிய தலைமுறையை சேர்ந்தவர்.60 ஆண்டுகளை 100 ஆண்டு சினிமாவில் கடந்திருக்கிறார்.அவர் இந்திய சினிமாவின் ஒரு பகுதி” என வியந்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங் .












