சிக்கல் வரத்தானே செய்யும், 2 பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும்போது யாருக்கு முதல் ஷோ என்கிற முன்னுரிமைக் கோரல் மிரட்டத்தான் செய்யும்?
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் சர்க்கரைப்பொங்கல் சாப்பிடுவதை விட தங்களின் அபிமான நடிகர்களின் படங்களை முதலில் பார்ப்பதே அருமை பெருமை என நினைக்கிறார்கள்.அந்தளவுக்கு ரசிகர்கள் வளர்க்கப் பட்டிருக்கிறார்கள்.
துணிவு படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு முழுக்க ரிலீஸ் செய்கிறது. இதே நிறுவனம் வாரிசு படத்தை சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வெளியிடுகிறது.மற்ற மாவட்டங்களில் வெவ்வேறு விநியோகஸ்தர்கள் வெளியிடுகிறார்கள்.
11 ம் தேதி அதிகாலை ஷோ ?யாருக்கு முன்னுரிமை முதலிடம்?நள்ளிரவு 1 மணிக்கு வாரிசு வெளியிட அனுமதி கேட்டிருக்கிறார்கள்.
“நாங்களும் அதே நேரத்தில் வருவோம்ல?”என்று துணிவும் அனுமதி கேட்டது..
சிக்கல்..பெரும் சிக்கல்?
ஒரே நேரத்தில் 2 படங்களும் வெளியானால் ரசிகர்களிடையே முட்டல் , மோதல் வராதா?சட்டம் ஒழுங்கு பிரச்னைன்னு எதிர்க்கட்சிகள் கூவாதா ?
அரசு என்ன சொன்னது?
1மணிக்கு துணிவு,4 மணிக்கு வாரிசு..நான்கு மணிக்கு வாரிசு திரையிடும்போது துணிவை வெளியிடவேண்டாம் .காலை 8 மணியிலிருந்து இரண்டு படங்களையும் வழக்கம்போல திரையிடலாம் என அரசு சொன்னதாக சொல்லுகிறார்கள்.
மல்டிபிள் திரை அரங்குகளை ஓகே.சிங்கிள் ஸ்க்ரீன் நிலை என்ன?
வாரிசு படத்தை வாங்கியிருக்கும் தனித்திரையரங்குகள் ஒரு மணிக்குப் பூட்டிவைத்திருக்க வேண்டுமா? இரசிகர்களும் தயார் படமும் தயார் எனும்போது ஒரு மணிக்கு வாரிசு படத்தைத் திரையிட தனித் திரையரங்குகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாமே? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
அதேபோல துணிவு படத்தைத் திரையிட வாங்கி வைத்திருக்கும் தனித்திரையரங்குகளில் நான்கு மணிக்காட்சியும் திரையிட்டால் என்ன? அதை ஏன் தடுக்கவேண்டும்? என்கிற கேள்வியும் எழுகிறது.
என்னப்பா தீர்ப்பு எழுதப்போகிறீர்கள்?












