டோலிவுட்டில் இம்சை மன்னன் என்பதாக என்.டி .ஆர்.பாலகிருஷ்ணாவை சொல்லுவார்களாம். அவரை எதிர்க்கும் நடிகைகளை தலை தூக்க விட மாட்டார் என்பார்கள்.வாழ்க்கையை இப்படியும் அனுபவிக்கலாம் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.சட்ட மன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
இந்த வயசிலும் இந்த மனிதன் எப்படியெல்லாம் என்ஜாய் பண்றார் என்று சக நடிகர்கள் வருந்துவதும் உண்டு. !
பொங்கலுக்கு வந்த இவரது படமான வீர சிம்ம ரெட்டி வெற்றி பெற்றதையொட்டி இரவு பார்ட்டி நடந்திருக்கிறது.
அதில் நடிகை ஹனி ரோஸும் கலந்து கொண்டிருக்கிறார்.
அந்த நடிகையுடன் பாலகிருஷ்ணா கைகளை பிணைத்துக்கொண்டு கோப்பைகளில் ஷாம்பெய்னை அனுபவித்து ,ரசித்து அருந்தியிருக்கிறார்கள். அந்த படத்தில் ஹனி ரோஸ் என்டிஆர் பாலகிருஷ்ணாவின் மனைவியாக நடித்திருப்பார்.
அன்றைய பார்ட்டியில் இவர்கள்தான் அதிக கவனம் ஈர்த்தவர்கள் .
யாரென்ன சொன்னால் என்ன ,எங்கள் உலகமே தனி என்கிறீர்களா.!