பொதுவாக பழனி மலை முருகன் என்றால் மலையாளிகளுக்கு பக்தி அதிகம். கூட்டம் கூட்டமாக வருவார்கள் .தரிசனம் செய்வார்கள் .
நடிகை அமலாபால் மட்டும் விதி விலக்கா?
அம்மாவுடன் பழனிக்கு வந்து பக்தி பழமாக மாறி இருக்கிறார்.கதம்பம் கழுத்திலும் கிடக்கிறது.நெற்றியில் தமிழ்க்கடவுள் முருகனின் திரு நீறு.
அம்மாவுடன் சிநேகிதியும் வந்திருந்தார்.
அவ்வளவாக கையில் படமில்லை என்பதால் இந்த பக்தி உலாவா என்பது தெரியவில்லை.இதற்கு முன்னர் கேரளத்தில் இருக்கிற ஒரு கோவிலில் இவர் கிருத்துவர் என்பதால் அனுமதிக்கப்படவில்லை.