Sunday, June 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

கொன்றால் பாவம்.( விமர்சனம்.)

admin by admin
March 10, 2023
in Reviews
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter


‘ஆ கரால ராத்திரி’ என்ற கன்னட படத்தின் மறு உருவாக்கமே ‘கொன்றால் பாவம்’ என்ற பெயரில் தமிழில் வெளியாகியிருக்கிறது. கன்னடத்தில் எழுதி, இயக்கிய தயாள் பத்மநாபன் தான், தமிழில் தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
‘ஆ கரால ராத்திரி’ கன்னட மொழிக்கான சிறந்த திரைப்பட விருதையும் பெற்றுள்ளது.
ஒரு முதிர்கன்னியின் அடங்கா காமத்தால் நடக்கும், ஒரு கொலை தான் இப்படத்தின் கதை. 1980 களில் தர்மபுரியில் நடப்பது போன்ற ஒரு சம்பவமாக ‘கொன்றால் பாவம்’ சித்தரிக்கப்பட்டுள்ளது. எப்படி இருக்கிறது? தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வருடும் படமா? இல்லை நெருடக்கூடிய படமா? பார்க்கலாம்!

வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் , ‘டைகர்’ தங்கதுரை, மனோபாலா, எஸ்ஆர் சீனிவாசன், சுப்ரமணியம் சிவா, மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

You might also like

‘சாருகேசி’ – விமர்சனம்!

‘ஆட்டி’ – விமர்சனம்!

‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!

குடிகாரனான சார்லி, மற்றும் ஈஸ்வரி ராவின் மகள் வரலட்சுமி சரத்குமார். குடும்பத்தில் நிலவும் வறுமை காரணமாக வரலட்சுமி சரத்குமாருக்கு, திருமணம் என்பது சாத்தியப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு ஊராக பயணித்து வரும் சந்தோஷ் பிரதாப், ஒரு இரவு நேரத்தில் சார்லியின் வீட்டில் தங்குகிறார். மேலும் அவரிடம் நகைகளும், பணமும் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. அதை கொள்ளையடிக்க வரலட்சுமி சரத்குமாரின் தலைமையில் சார்லியின் மொத்த குடும்பமும் திட்டமிடுகிறது. திட்டமிட்டபடி நடந்ததா, இல்லையா? என்பதே ‘கொன்றால் பாவம்’ படத்தில் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

எந்த கதாபாத்திரமானாலும் அதை உள்வாங்கி நடிக்கக்கூடிய நடிகை, வரலட்சுமி சரத்குமார். கதாபாத்திரத்தை உணர்ந்து, இயக்குனரின் தேவைக்கேற்ப நடித்துள்ளார். பெண்களை மயக்கும் கட்டுமஸ்தான உடற்கட்டில் சந்தோஷ் பிரதாப், நடித்திருக்கிறார். 

சார்லி, ஈஸ்வரி ராவ் , ‘டைகர்’ தங்கதுரை, மனோபாலா, எஸ்ஆர் சீனிவாசன், சுப்ரமணியம் சிவா, மீசை ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். குறிப்பிட்டு சொல்லும்படியான நடிப்பு என்றால் அது வரலட்சுமி, மற்றும் ஈஸ்வரிராவின் நடிப்பு மட்டுமே!
மற்றபடி வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் படம் பார்ப்பவர்களை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை! என்பது தான் படத்தின் பெரும் பலவீனம். வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரத்தின் மேல் பரிதாபமும் ஏற்படவில்லை! கோபமும் வரவில்லை. அனைத்து கதாபாத்திரங்களும் அந்நியப்பட்டு நிற்கிறது.
செழியனின் ஒளிப்பதிவும், சாம் சி எஸ்’ ன் இசையும் சிறப்பாக இருக்கிறது. இரண்டுமே படத்தின் பெரும் பலம்.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அதீதமானதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது. அதை படம் பார்ப்பவர்கள் வலுக்கட்டாயமாக நம்ப வேண்டும் என்பதற்காக ‘உண்மை கற்பனையை விட விநோதமானது’ என்று சொல்லி, அதை நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார், இயக்குனர் தயாள் பத்மநாபன்.

அது அவரது நம்பிக்கையாகவே இருக்கட்டும்!?

ஆசை எப்படி சகஜமோ, அதைப்போல் காமமும் சகஜம் தான் என்பதை வலியுறுத்தி, அதற்காக கொலை செய்தாலும் தப்பில்லை!? என்று சொல்லி, பெண்களை இழிவு படுத்தும் படமாகவே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சந்தோஷ் பிரதாப் ‘கர்லா கட்டையை’ சுற்றும் போது வரலட்சுமி சரத்குமார் பேசும் வசனம், இயக்குனர் தயாள் பத்மநாபனுடைய ரசனையின் உச்சம்!

மொத்தத்தில இந்தப் படத்தை உடனே தியேட்டருக்கு சென்று பார்க்கனுமான்னு கேட்டீங்கன்னா.. கன்னடம் தெரிஞ்சா… டிஸ்னில OTT யில பாருங்க! தமிழ்ல பார்க்கனும்னா OTT யில வரும்போது பாருங்க!

Tags: ஈஸ்வர்ராவ்கொன்றால் பாவம்சந்தோஷ் பிரதாப்சார்லிசுப்ரமணியம் சிவாதயாள் பத்மநாபன்வரலட்சுமி சரத்குமார்
admin

admin

Related Posts

‘சாருகேசி’ – விமர்சனம்!
Reviews

‘சாருகேசி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஆட்டி’ – விமர்சனம்!
Reviews

‘ஆட்டி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!
Reviews

‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!

by admin
June 14, 2026
‘பெத்தி’ – விமர்சனம்!
Reviews

‘பெத்தி’ – விமர்சனம்!

by admin
June 5, 2026
‘பரிமளா அண்ட் கோ’ – விமர்சனம்!
Reviews

‘பரிமளா அண்ட் கோ’ – விமர்சனம்!

by admin
June 5, 2026

Recent News

தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?